சூப்பர் ஹீரோனா யார் தெரியுமா ? விஜய் சேதுபதி அசத்தல் பதில்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sakthi Nian | Jul 30, 2019 05:23 PM

சூப்பர் ஹீரோனா யார் தெரியுமா ? விஜய் சேதுபதி அசத்தல் பதில்

Dev3 BNS July 17 BT

உலகமெங்கும் மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளான அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் திரைப்படம் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகிறது. இந்தியாவில் இந்த படத்தினை பிரபலப்படுத்தும் நோக்கில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் மார்வெல் ஆன்தம் தமிழ் வெர்ஷன் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வில் ஏ.ஆர்.ரஹ்மான், ஆண்ட்ரியா, விஜய்சேதுபதி ஆகியோர் கலந்துகொண்டனர். படத்தில் ஆண்ட்ரியாவும் விஜய் சேதுபதியும் தமிழ்

பதிப்புக்கு டப்பிங் பேசியுள்ளனர். விஜய் சேதுபதி அயர்ன் மேன் வேடத்துக்கு டப்பிங் பேசியுள்ளாராம்.

இந்த விழாவில் இந்தியாவில் தயாராகும் சூப்பர் ஹீரோ படங்கள் சரியாக போகாததற்கு காரணம் என்ன என்று செய்தியாளர்கள் விஜய் சேதுபதியிடம் கேட்டனர் . அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி,

''நீங்க தப்பா புரிஞ்சிட்டிருக்கீங்க. நாம எடுக்குறது எல்லாம் சூப்பர் ஹீரோ படம் தான் அது உங்களுக்கு தெர்ல. ஒருத்தர அடிச்சா மேல போய் விழுறாங்க அதுக்கு பேரு என்னங்க, என்ன பொறுத்தவரைக்கும் கெட்டதை அழிப்பவன் தான் சூப்பர் ஹீரோ'' என்றார்.

Tags : #DHONI