ஜாம்பவான்களின் அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பம்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sakthi Nian | Oct 16, 2019 12:13 PM

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்கள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரையன் லாரா உள்ளிட்ட வீரர்கள் விளையாட உள்ள டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Dev3 Tamil BNS News 1 16 Oct B

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று விளையாடும் டி20 தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2 -ம் தேதி முதல் -16 ம் வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று விளையாடுகின்றனர்.

கடந்த 2013 -ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின், கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். 24 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் 34,000 ரன்களை குவித்துள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை அடித்து மாபெரும் சாதனையைப் படைத்துள்ளார். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரையன் லாரா டெஸ்ட் கிர்க்கெட்டில் தனி நபராக 400 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். இவர் கடந்த 2007 -ல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் Road Safety World Series என்ற டி20 கிரிக்கெட் தொடரில் சச்சின், லாரா, சேவாக் மற்றும் முத்தையா முரளிதரன் உள்ளிட்ட வீரர்கள் மீண்டும் விளையாட உள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #INDIA1