செம பயம்..'பழைய' பேப்பருக்குள்ள 'ஒளிச்சு' வச்ச '16 பவுன்' நகை.. மறந்து போய் இப்படியா பண்றது?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sakthi Nian | Nov 23, 2019 01:52 PM

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகில் உள்ள மசக்காளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வருகிறார். இவரின் மனைவி கலாதேவி. இவர் தன்னிடம் இருந்த நகைகளை திருடர்களுக்கு பயந்து பழைய பேப்பர்களுக்கு அடியில் ஒளித்து வைத்திருக்கிறார்.

 

BT Dev3 BNS News 2 Nov 23 TAM

திருடர்களுக்கு பயந்து 16 பவுன் நகைகள், வைரத்தோடு என மொத்தம் சுமார் 5 லட்சம் மதிப்புள்ள நகைகளை கலாதேவி மறைத்து வைத்திருந்திருக்கிறார். இந்தநிலையில் நேற்று சேலம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் பழைய பேப்பர் வாங்க வந்துள்ளார். நகைகளை வைத்தது மறந்து போய் கலாதேவி பேப்பர்களை எடை  போட்டுவிட்டார்.

தொடர்ந்து நகைகள் குறித்த ஞாபகம் வந்தவுடன் ராசிபுரம் காவல்நிலையத்தில் கலாதேவி புகார் அளித்துள்ளார். உடனே போலீசார் சேலம் சென்று செல்வராஜிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அவரும் நகைகள் இருந்தது உண்மை தான், யாருடையது என தெரியாததால் நகைகளை எடுத்து வைத்திருந்ததாக கூறியுள்ளார்.

பின்னர் காவல்துறையினர் அந்த நகைகளை சரிபார்த்து கலாதேவியிடம் ஒப்படைத்தனர். நேர்மையாக நடந்து கொண்ட செல்வராஜ்க்கு கலாதேவி ரூபாய் 10 ஆயிரம் பணத்தை அன்பளிப்பாக அளித்தார்.

Tags : #ADMK