தளபதி தளபதி ரத்தம் நான்-பிரபல நடிகரின் மகன் ஒரு வெறித்தனமான விஜய் ரசிகர்

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Dev Team | Mar 11, 2019 06:19 PM

தளபதிதளபதி தளபதி பிரபல நடிகர் நாசரின் மகன் அபி ஹாசன், தான் ஒரு தீவிரமான விஜய் ரசிகர் என தெரிவித்துள்ளார்.

Kamal Haasan on Abhinandan issue, it\'s not a time for Debate

நடிகர் நாசரின் மகன் அபி ஹாசன் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடித்துள்ள ‘கடாரம் கொண்டான்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். இவர் ஏற்கனவே அட்லி இயக்கத்தில் வெளியான தளபதி விஜய்யின் ‘மெர்சல்’ திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

‘கடாரம் கொண்டான்’ திரைப்படத்தின் டீசரில் அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக நடித்துள்ள அபி ஹாசனின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தன. இந்நிலையில், Behindwoods-ன் மாத்தியோசி வித் அக்னி நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் அபி ஹாசன், கடாரம் கொண்டான் திரைப்படம் பற்றியும், வெறித்தனமான ரசிகனாக தளபதி விஜய்யை பார்த்து ரசித்தது பற்றியும் பகிர்ந்துக் கொண்டார்.

அப்போது பேசிய அபி, கில்லி படத்தில் இருந்து தளபதியின் தீவிர ரசிகன் நான். மெர்சல் திரைப்படத்தின் லுக் டெஸ்ட்டின் போது முதன்முறையாக அவரை பார்த்தேன். நாசரின் மகன் என தெரிந்ததும் என்னை அழைத்து கைக்குலுக்கி, எனது அண்ணன் பற்றி பாசமாக விசாரித்தார்.