சிவகார்த்திக்கேயனுக்காக Semayana மியூசிக்கல் ட்ரிபூயூட் - மெய் மறந்து கேட்ட ஸ்டார்ஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கடந்த வருடம் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியான 'ஹீரோ' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரித்திருந்த இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

Sivakarthikeyan got Musical Tribute in Behindwoods Gold Medals 2019

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் Behindwoods Gold Medals 2019 விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவருக்கு 'கனா' படத்துக்காக பெஸ்ட் புரொடியூசர் விருது மற்றும் தி கோல்டன் ஃபேமிலி எண்டர்டெயினர் ஆஃப் தமிழ் சினிமா விருது 'நம்ம வீட்டுப் பிள்ளை'க்காகவும் பெற்றார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு ட்ரிபியூட் அளிக்கும் வகையில் வயலினிஸ்ட் மனோஜ், 'எதிர் நீச்சல்' படத்தில் இடம் பெற்ற பூமி என்ன சுத்துதே, 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் இடம் பெற்ற பார்க்காத , 'மான் கராத்தே' படத்தில் இடம் பெற்ற உன் விழிகளில் உள்ளிட்ட பாடல்களை இசைத்தார். அதனை பார்த்த நட்சத்திரங்கள் முதல் ரசிகர்கள் வரை மிகவும் ரசித்து கேட்டனர்.

Entertainment sub editor